விருத்தாசலத்தில் பள்ளி சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த திமுக முன்னாள் பிரமுகர் பக்கிரிசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட பக்கிரிசாமி, திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதையும் முதலமைச்சர் கூறினார்.
இந்நிலையில் பக்கிரிசாமி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின்பேரில் பக்கிரிசாமி ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
newstm.in