சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் 10 பேர் மரணமடைந்தனர்.
பாஸ்டர் மாவட்டம் அரண்பூர் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த மாவட்ட ரிசர்வ் காவலர்கள் 10 பேரும், ஓட்டுநரும் அந்த இடத்திலேயே இறந்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஸ் பாகல், மாவோயிஸ்ட்களுடனான சண்டை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, சத்தீஸ்கர் முதலமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக நிலவரத்தை கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என தெரிவித்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.