
பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது. திடீரென பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி அங்குள்ள மாணவர்களை மிரட்டினார்.
இதனால் பள்ளி மாணர்கள் அச்சம் அடைந்தனர். அந்த நபர் தனது கையில் ஆசிட் பாட்டிலையும் வைத்திருந்தார். இதை எல்லாம் பார்த்த பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள்.

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர் மிரட்டல் விடுத்த நபரிடம் பேச்சு கொடுத்து அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் ஆயுதங்கள், ஆசிட் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆயுதங்கள், ஆசிட் பாட்டில்களை அந்த இளைஞர்கள் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் பெயர் ராஜு பல்லவ் என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in