பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 9ம் திகதியின் பின்னர் பாடசாலை புத்தக பைகள் மற்றும் பாதணிகள் என்பனவற்றின் விலைகளை 500 ரூபா முதல் 1000 ரூபா அளவில் குறைப்பதற்கு இணங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட உறுதி
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் உற்பத்தியாளர்கள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் நேற்றைய தினம் நிதி இராஜாங்க அமைச்சரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பினைத் தொடர்ந்து விலைகளை குறைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
உற்பத்தி மூலப் பொருட்களின் விலைகள்
அமெரிக்க டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில் உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நலனை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் கோரியுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் மே மாதம் 9ம் திகதியின் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பைகள் மற்றும் பாதணிகளின் விலைகள் 500 முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது.