மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சொந்த ஊர் அல்லது சுற்றுலா செல்வது வழக்கம். எனவே, பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், தாம்பரத்திலிருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று மதுரை தென்னக ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு ஒருவழி சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும்.

மறுநாள் அதிகாலை 6.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். பின்பு காலை 8:45 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் செங்கல்பட்டு,மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் வழக்கமானடிக்கெட்கட்டணத்தை விட 1.3 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.