மாற்று வழியில்லாத போது ஐ.எம்.எப் இற்கு செல்ல நடவடிக்கை எடுத்திருந்தோம்! ரணில் நாடாளுமன்றில் அறிவிப்பு (Live)


சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதற்கான அனுமதியை அனைவரும் நாடாளுமன்றில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் விசேட உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல நடவடிக்கை

மேலும் தெரிவிக்கையில், நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர மாற்று வழியொன்று இல்லை.

மாற்று வழியொன்று இல்லாத நிலையில், யாரும் அவ்வாறான வழிமுறையொன்றை முன்வைக்காத போதே, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல நடவடிக்கை எடுத்திருந்தோம்.

மாற்று வழியில்லாத போது ஐ.எம்.எப் இற்கு செல்ல நடவடிக்கை எடுத்திருந்தோம்! ரணில் நாடாளுமன்றில் அறிவிப்பு (Live) | President Special Speech In Sl Parliament

நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான அனுமதியை நாடாளுமன்றில் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இதனை தற்போது செய்யாவிட்டால் நாட்டின் இளைய தலைமுறையை காட்டிக்கொடுத்தது போலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றிணைந்து பயணிப்பதற்கான திட்டம்

அத்துடன் முழு நாடாளுமன்றமும் அரசாங்கமாக மாறி எதிர்வரும் 2048ஆம் ஆண்டு வரை ஒரு கொள்கையொன்றில் பயணிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்போம்.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று பாராமல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னெடுத்துச் செல்வோம்.

மாற்று வழியில்லாத போது ஐ.எம்.எப் இற்கு செல்ல நடவடிக்கை எடுத்திருந்தோம்! ரணில் நாடாளுமன்றில் அறிவிப்பு (Live) | President Special Speech In Sl Parliament

தற்போது பல தொழிற்சங்கங்களுக்கு வரி உள்ளிட்ட பல விடயங்களில் பிரச்சினைகள் உள்ளன.

அவற்றை பேசித் தீர்த்துக் கொள்வோம். 6 மாதங்களுக்கு ஒருமுறை “தேசிய சபை” போன்றவற்றின் ஊடாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்போம் என கூறியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.