மூன்றே மணி நேரத்திற்குள் மாரத்தான் ஓட்டத்தை முடித்து வீடு திரும்பிய பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்

மாரத்தான் ஓட்டத்தை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரித்தானியர் ஒருவர், வழியிலேயே உயிரிழந்த சம்பவம் ஓட்டப்பந்தய விரும்பிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூன்றே மணி நேரத்திற்குள் ஓட்டத்தை முடித்த பிரித்தானியர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான லண்டன் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஸ்டீவும் (Steve Shanks, 45) ஒருவர். வெறும் இரண்டு மணி 53 நிமிடங்களில், 26.2 மைல் தூரத்தை ஓடிக்கடந்தார் அவர்.

மூன்றே மணி நேரத்திற்குள் மாரத்தான் ஓட்டத்தை முடித்து வீடு திரும்பிய பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம் | Marathon Tragedy Befell The British Back Home

Credit: Facebook

வெளியான துயர செய்தி

இந்நிலையில், ஓட்டப்பந்தய அமைப்பாளர்கள் ஸ்டீவ் தொடர்பில் துயர செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். லண்டன் மாரத்தான் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் அனைவரும் ஸ்டீவ் ஷாங்க்ஸுடைய திடீர் மரண செய்தி கேட்டு பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். ஏப்ரல் 23ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை லண்டன் மாரத்தானில் பங்குகொண்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஸ்டீவ், வழியிலேயே திடீரென மரணம் அடைந்துவிட்டார்.

மூன்றே மணி நேரத்திற்குள் மாரத்தான் ஓட்டத்தை முடித்து வீடு திரும்பிய பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம் | Marathon Tragedy Befell The British Back Home

Credit: The Mega Agency

நாட்டிங்காமிலுள்ள பிங்காமில் வாழும் 45 வயதான ஸ்டீவ், அனுபவம் வாய்ந்த ஒரு ஓட்டப்பந்தய வீரர் ஆவார். ஞாயிற்றுக்கிழமையன்று, 2 மணி 53 நிமிடங்கள் 26 விநாடிகளில் அவர் ஓட்டப்பந்தயத்தை முடித்தார்.

ஸ்டீவுடைய மரணத்துக்கான காரணம், உடற்கூறு ஆய்வுக்குப் பின்தான் தெரியவரும், என ஓட்டப்பந்தய அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றே மணி நேரத்திற்குள் மாரத்தான் ஓட்டத்தை முடித்து வீடு திரும்பிய பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம் | Marathon Tragedy Befell The British Back Home

Credit: Twitter

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.