மே மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்


2023ஆம் ஆண்டின் மே மாதத்தில் பல மாற்றங்கள் பிரான்சில் நிகழ இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

பள்ளி விடுமுறைகள் முடிவுக்கு வருகின்றன 

மத்திய பிரான்சிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஏற்கனவே விடுமுறை முடிந்து பள்ளிகளுக்குத் திரும்பிவிட்டார்கள்.

வட பிரான்ஸ் மற்றும் Provence-Alpes-Côte d’Azur பகுதியில் வாழும் மாணவர்களுக்கு மே மாதம் 2ஆம் திகதி வகுப்புகள் துவங்க உள்ளன.

பாரீஸ் மற்றும் Toulouse பகுதியில் வாழும் மாணவர்களுக்கு, மே மாதம் 9ஆம் திகதி வகுப்புகள் துவங்க உள்ளன. 

வருமான வரி செலுத்தும் நேரம்

பிரான்சில் வாழும் அனைவரும் வருமான வரி செலுத்தத் துவங்கும் மாதம் மே மாதம். வருமான வரி செலுத்தவேண்டிய கடைசி நாள் ஜூன் 8. 

குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு

மே மாதம் 1ஆம் திகதி தானாகவே குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கும். மே 1 முதல் குறைந்தபட்ச ஊதியம் 2.19 சதவிகிதம் அதிகரிக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு துறை தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம் 11.52 யூரோக்கள் அதிகரிக்கும். வரிப்பிடித்தம் போக, 9.12 யூரோக்கள்.
ஆக, வாரம் ஒன்றிற்கு 35 மணி நேரம் வேலை செய்யும் முழுநேரப் பணியாளர் ஒருவருக்கு வரிப்பிடித்தம் போக, ஊதியத்தில் 30 யூரோக்கள் அதிகரிக்கும்.

மே மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் | Major Changes Will Happen In France

ஓய்வு பெறும் வயது தொடர்பிலான பிரேரணை மீதான அரசியல் சாசன கவுன்சிலின் முடிவு

மே மாதம் 3ஆம் திகதி, ஓய்வு பெறும் வயது குறித்த பிரேரணை மீதான இரண்டாவது கோரிக்கை தொடர்பில், அரசியல் சாசன கவுன்சில் தங்கள் முடிவை வெளியிட உள்ளது. ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு தொடர்பான வேலைநிறுத்தங்களையும் எதிர்பார்க்கலாம்.  

The Cannes திரைப்பட விழா

மே 16ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை பிரான்சில் The Cannes திரைப்பட விழா நடைபெற உள்ளது. 

மே மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் | Major Changes Will Happen In France

(Photo by LOIC VENANCE / AFP)

விறகு உதவியுடன் வீட்டை வெப்பப்படுத்துவோருக்கான அரசு உதவி

பிரான்சில் வாழும் குறைந்த வருவாய் கொண்ட, தங்கள் வீடுகளை வெப்பப்படுத்த விறகுகளைப் பயன்படுத்தும் மக்கள், அரசு உதவி கோரி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், மே மாதம் 31ஆம் திகதி. 

மாணவர்களுக்கான நிதி உதவி

மாணவர்களுக்கான நிதி உதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே மாதம் 31ஆம் திகதி ஆகும். விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இல்லையானாலும் கூட பரவாயில்லை, குறிப்பிட்ட நாளுக்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது அவசியம் ஆகும் என்கிறார்கள் அதிகாரிகள். 

மே மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் | Major Changes Will Happen In France



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.