விமலின் புத்தகத்திற்கு அமெரிக்க தூதுவர் கடும் எதிர்ப்பு!


இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்ச அண்மையில் அமெரிக்காவிற்கு எதிராக
சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி
சுங் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தமது டுவிட்டர் பதிவில் குற்றச்சாட்டுகளை ‘அடிப்படையற்றது’ என்று
குறிப்பிட்டுள்ளார்.

“Nine The Hidden Story” நூல் 

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர், அண்மையில வெளியிட்ட நூலில் ‘புனைகதை’ என்ற
அளவில் அப்பட்டமான பொய்களை பரப்பியுள்ளதாக தூதுவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விமலின் புத்தகத்திற்கு அமெரிக்க தூதுவர் கடும் எதிர்ப்பு! | Us Ambassador Slams Wimal S Fiction Book

75 ஆண்டுகளாக, அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகம், இறையாண்மை மற்றும்
செழிப்புக்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கின்றன – ஒரு கூட்டாண்மை
மற்றும் எதிர்காலத்தை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்புகிறோம்’ என்று அவர்
கூறியுள்ளார்.

விமல் வீரவசனவினால்
அண்மையில் வெளியிடப்பட்ட ”ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூலில், 2022
ராஜபக்ச குறித்த சர்ச்சைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கு எதிராக பல்வேறு
குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுக்கும் வகையிலேயே ஜூலி சங்கின் கருத்துக்கள் இருக்கலாம்
என்று கருதப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.