குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைரத்தில் பற்களை செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
தங்கத்தில் பல் கட்டி பார்த்திருப்போம். ஆனால் வைரத்தில் பற்கள் கட்டி இப்போது தான் பார்க்கிறோம். ஆம், சூரத் நகரில் வைரத்தில் பற்களை செய்து வியாபாரிகள் அசத்தியுள்ளனர்.
வைரத்தை வைத்து 16 பற்களை செய்யும் வியாபாரிகள், அதில் சுமார் 2000 வைர கற்களை பதிக்கிறார்கள். வைரங்கள் மட்டுமில்லாது, தங்கம் மற்றும் வெள்ளியையும் இவர்கள் இந்த பற்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.

வைரங்கள் மற்றும் வெள்ளியை வைத்து 16 பற்கள் உள்ள நகைகளை செய்தால் அவை இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதில் தங்கம் சேர்த்தால் அவை ரூ. 5 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
சுமார் 40 கிராம் இடையுள்ள இந்த பற்கள் தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்டால், அவை சுமார் 25 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என வியாபாரிகள் கூறுகிறார்கள்.
8 பற்கள் மேற்பரப்பிலும், 8 பற்கள் கீழ்பரப்பிலும் என மொத்தம் 16 பற்களை வைத்து இதனை வியாபாரிகள் தயாரிக்கிறார்கள். இந்த வைர பற்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
newstm.in