Leo: லியோ படத்தில் இணையும் விக்னேஷ் சிவன் ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. தன் முந்தைய படமான விக்ரம் மூலம் மிரட்டலான வசூல் சாதனையை நிகழ்த்தி காட்டினார் லோகேஷ். அதன் பிறகு இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலர் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் தெரிவித்தனர்.

இந்த சமயத்தில் தான் லோகேஷ் மாஸ்டர் படத்திற்க்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். இதன் காரணமாகவே லியோ படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

Simbu: தீபாவளிக்கு என்ட்ரி கொடுக்கும் சிம்பு ? பக்க பலமாக இருக்கும் உலகநாயகன்..இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

இதைத்தொடர்ந்து லியோ திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மே மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும், அதன் பிறகு விறுவிறுப்பாக போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்டு படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி திரையில் வெளியிடவும் படக்குழு முடிவெடுத்துள்ளது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதைத்தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் லியோ படத்தில் பாடல்கள் எழுதுவீர்களா என கேள்வி கேட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், இதுவரை லியோ படத்திலிருந்து என்னை யாரும் பாடல் எழுத அழைக்கவில்லை, ஒருவேளை அழைத்தாள் கண்டிப்பாக எழுதுவேன் என கூறியுள்ளார்.

இவர் ஏற்கனவே லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். அந்த கண்ண பாத்தாக்கா மற்றும் குய்ட் பண்ணுடா என மாஸ்டர் படத்தில் இரண்டு ஹிட் பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன். எனவே இவர்கள் மீண்டும் இணையும் படமான லியோவிலும் விக்னேஷ் சிவன் பாடல்கள் எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இவரிடம் இந்த கேள்வியை கேட்டனர்.

ஆனால் இதுவரை அந்த வாய்ப்பு வரவில்லை என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வருகின்றன.

மேலும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. இதைப்பற்றி பேசிய விக்னேஷ் சிவன் தற்போது தான் கதை விவாதம் போய்க்கொண்டிருப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.