மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள கிராஸ்ஓவர் ஸ்டைல் மாடலான மாருதி Fronx காருக்கு கடுமையான சவாலினை பலேனோ, பிரெஸ்ஸா, XUV300, நெக்ஸான், வெனியூ, சோனெட், கிகர் மற்றும் மேக்னைட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
ரூ. 6.50 லட்சம் முதல் ரூ. 14 லட்சம் விலைக்குகள் அமைந்த 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் ஃபிரான்க்ஸ் கார் எதிர்கொள்ளுகின்றது. 1.2 லிட்டர் என்ஜின் மாடல் ₹ 7.46 லட்சம் முதல் ₹ 9.27 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்து உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடல் ₹ 9.72 லட்சம் முதல் ₹ 13.13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி Fronx Vs Rivals
பலேனோ காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள க்ராஸ்ஓவர் ரக மாடலாக தயாரிக்கப்பட்டுள்ள ஃபிரான்க்ஸ் காரில் 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் என்ஜின் பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் (மைல்டு ஹைபிரிட்) 100PS மற்றும் 148Nm டார்க் வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை அடங்கும்.
இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த என்ஜின் ஆக இடம்பெற்றுள்ள XUV300 காரில் 130hp பவரை வெளிப்படுத்துகின்றது. இதற்கு அடுத்தப்படியாக, நெக்ஸான், வெனியூ மற்றும் சோனெட் இரு கார்களும் ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன. அதேபோல கிகர் மற்றும் மேக்னைட் என இரண்டும் ஒரே என்ஜினை பெற்றுள்ளது.
MARUTI SUZUKI FRONX VS RIVALS | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
Fronx | Brezza | XUV300 | Nexon | Venue/Sonet | Kiger/Magnite | ||||
Type | 4 cyl NA/3 cyl turbo | 4 cyl NA | 3 cyl turbo/3 cyl (TGDi) | 3 cyl turbo | 4 cyl NA/ 3 cyl turbo | 3 cyl NA/ 3 cyl turbo | |||
Displacement | 1197cc/998cc | 1462cc | 1197cc/ 1197cc (TGDi) | 1199cc | 1197cc/ 998cc | 999cc/ 999cc | |||
Power | 90hp/100hp | 103hp | 110hp/ 130hp (TGDi) | 120hp | 83hp/120hp | 72hp/ 100hp | |||
Torque | 113Nm/147.6Nm | 136.8Nm | 200Nm/ 250Nm (TGDi) | 170Nm | 113.8Nm/ 172Nm | 96Nm/152Nm (CVT), 160Nm (MT) | |||
Manual Gearbox | 5MT/ 5MT | 5MT | 6MT/ 6MT (TGDi) | 6MT | 5MT | 5MT/ 5MT | |||
Automatic Gearbox | 5AMT/ 6AT | 6AT | 6AMT | 6AMT | 6iMT/ 7DCT | CVT | |||
ARAI mileage MT | 21.79kpl/ 21.5kpl | 20.15kpl | 17kpl (non-TGDi) | 17.33kpl | 17.3kpl | 18.75kpl/ 20kpl | |||
ARAI mileage AT | 22.89kpl/20.01kpl | 19.80kpl | – | 17.05kpl | 18.1kpl/ 18kpl | 17.7kpl |
வழக்கம்போல அதிகப்படியான மைலேஜ் வழங்குவதில் மாருதி கார்கள் முதன்மை வகிக்கின்றது. ஃபிரான்க்ஸ் கார் லிட்டருக்கு அதிகபட்சமாக 22.89 கிமீ வழங்குகின்றது. இதற்கு அடுத்தப்படியாக, பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ மற்றும் சோனெட் உள்ளது.
Maruti Fonx price Vs Rivals
இறுதியாக விலையை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம். பொதுவாக மாருதி கார்கள் விலை குறைவாகவே அமைந்திருக்கின்றது.
MARUTI SUZUKI FRONX VS RIVALS | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
Fronx | Brezza | Nexon | XUV300 | Venue | Sonet | Kiger | Magnite | |
MT | ₹ 7.47-11.64 lakh | ₹ 8.29-12.48 lakh | ₹ 7.80 -12.10 lakh | ₹ 8.42-13.18 lakh | ₹ 7.72-12.35 lakh | ₹ 7.79-13.09 lakh | ₹ 6.5-10 lakh | ₹ 6-9.92 lakh |
AT | ₹ 8.88 – 13.14 lakh | ₹11.15 – 13.98 lakh | ₹ 9.45-12.75 lakh | ₹ 10.85-13.37 lakh | ₹ 11.43 -13.66 lakh | ₹ 11.99 -13.89 lakh | ₹ 8.47 -11 lakh | ₹ 10 -10.86 lakh |
(கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலை விபரமும் எக்ஸ்ஷோரூம்)