தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். மிஷ்கின் படத்திற்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. யூத் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மிஷ்கின். தொடர்ந்து காதல் வைரஸ், ஜித்தன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மிஷ்கின்.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓணாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைகோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது பிசாசு படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார் மிஷ்கின். லியோ படத்தில் தனது போர்ஷனை நிறைவு செய்ததும் உருக்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தார் மிஷ்கின்.
Trisha: மாடர்ன் லுக்கில் மிரட்டும் குந்தவை… த்ரிஷாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
இந்நிலையில் Die No Sirs பிரஸ் மீட்டில் பங்கேற்றார் மிஷ்கின். அப்போது பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் மிஷ்கின். இயக்குநருக்கான அழுத்தத்தால் மிஷ்கின் தனது படங்களின் படப்பிடிப்பின் போது ஒரு நாளைக்கு 100 சிகரெட்டுகளுக்கு மேல் புகைப்பதாகவும், சிகரெட் பிடிப்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் போனி கபூர் யார் என்று தனக்கு தெரியாது என்றும், போனி கபூரின் மறைந்த மனைவி ஸ்ரீதேவியை தெரியும் என்றும் கூறினார் மிஷ்கின். ஸ்ரீதேவியின் நடிப்பிற்கான தனது பாராட்டைப் தெரிவித்த மிஷ்கின், உலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் என்றும் புகழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் கணவரான தயாரிப்பாளர் போனி கபூரும் பங்கேற்றிருந்தார்.
Meena: 46 வயசா… இது ஒன்னே போதும்.. இன்னொரு ரவுண்ட் வரலாம்.. மீனாவோட லேட்டஸ்ட் வீடியோ!
தொடர்ந்து பேசிய இயக்குநர் மிஷ்கின் ‘டை நோ சார்ஸ்’ படத்தின் இயக்குனர் மாதவனுக்கு இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்தினார், மேலும் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று தான் உணருவதாகவும் தெரிவித்தார். மிஷ்கின் ஓபனாக பேசினாலும் புகைப்பிடிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என கூறியதை ட்ரோலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நீண்ட நாட்களாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வரும் நிலையில் தாமதமாகி வருகிறது. இதனிடையே இயக்குநர் மிஷ்கின் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijayakanth: விஜயகாந்த் சாப்பிடுவாரா? தூங்குவாரான்னு கூட தெரியாது… பிரபல நடிகர் உருக்கம்!