Nandita das : அழகி படத்தில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா.. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை : தங்கர்பச்சான் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகி.

இப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நந்திதா தாஸ் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

கதைபேசிய காதல் : அழகி திரைப்படம் வெளியாகி இருவது ஆண்டுகள் ஆனப்போதும் இந்த படம் இன்னமும் மனதோடு கதை பேசிக்கொண்டுதான் இருக்கிறது. மனதிற்குள் எத்தனைக் காதல் வந்தாலும்,மனதில் முளைவிட்ட அந்த முதல் காதல் மனதை விட்டு என்று அழியாது. காதலின் பிரிவு, தோல்வி, அது தரும் வலியில் சிக்கி தவிக்காதவர்கள் எவரும் இல்லை.

அறியாப்பருவ காதல் :அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் புகுந்து குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தைகளும் தான் அழகி திரைப்படத்தின் ஒன்லைன் கதையாகும். தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி என்ற அளவில் அந்த படத்தை கொணடாடதவற்களே இல்லை எனலாம்.

வெற்றிக்கு காரணம் : இப்படம் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம் ஃபேர் விருதை வென்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாட்டுச் சொல்லி என்ற பாடலுக்காக சாதனா சார்கம் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணம் இளையராஜா தான்.

தனலட்சுமி : “ஒளியிலே தெரிவது தேவதையா” என மனதிற்குள் வந்த தனலட்சுமி கதாபாத்திரம் படம் முடிந்த பிறகும் மனதை விட்டு இறங்க மறுத்ததே நந்திதாதாஸின் நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இப்படத்தில் நடித்த நந்திதா தாஸ் அதன் பிறகு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நக்சலைட்டாக நடித்திருந்தார். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து நீர்பறவைபடத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்தார்.

Actress Nandita das who acted with parthiban in azhagi movie current situation

தனலட்சுமியா இது : தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம், குஜராத்தி, ஓடியா என பல மொழிகளில் நடித்து வரும் நந்திதாஸ், கடைசியாக தெலுங்கில் வெளியான விரட்ட பர்வம் படத்தில் எழுந்தாளராக நடித்திருந்தார். 50 வயதை கடந்து விட்ட நந்திதாஸ் தாஸ் தற்போது, வெள்ளை முடி, கண்ணாடியுடன் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கிறார். சென்னை : தங்கர்பச்சான் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகி.

இப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நந்திதா தாஸ் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

கதைபேசிய காதல் : அழகி திரைப்படம் வெளியாகி இருவது ஆண்டுகள் ஆனப்போதும் இந்த படம் இன்னமும் மனதோடு கதை பேசிக்கொண்டுதான் இருக்கிறது. மனதிற்குள் எத்தனைக் காதல் வந்தாலும்,மனதில் முளைவிட்ட அந்த முதல் காதல் மனதை விட்டு என்று அழியாது. காதலின் பிரிவு, தோல்வி, அது தரும் வலியில் சிக்கி தவிக்காதவர்கள் எவரும் இல்லை.

அறியாப்பருவ காதல் :அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் புகுந்து குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தைகளும் தான் அழகி திரைப்படத்தின் ஒன்லைன் கதையாகும். தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி என்ற அளவில் அந்த படத்தை கொணடாடதவற்களே இல்லை எனலாம்.

Actress Nandita das who acted with parthiban in azhagi movie current situation

வெற்றிக்கு காரணம் : இப்படம் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம் ஃபேர் விருதை வென்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாட்டுச் சொல்லி என்ற பாடலுக்காக சாதனா சார்கம் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணம் இளையராஜா தான்.

தனலட்சுமி : “ஒளியிலே தெரிவது தேவதையா” என மனதிற்குள் வந்த தனலட்சுமி கதாபாத்திரம் படம் முடிந்த பிறகும் மனதை விட்டு இறங்க மறுத்ததே நந்திதாதாஸின் நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இப்படத்தில் நடித்த நந்திதா தாஸ் அதன் பிறகு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நக்சலைட்டாக நடித்திருந்தார். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து நீர்பறவைபடத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்தார்.

தனலட்சுமியா இது : தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம், குஜராத்தி, ஓடியா என பல மொழிகளில் நடித்து வரும் நந்திதாஸ், கடைசியாக தெலுங்கில் வெளியான விரட்ட பர்வம் படத்தில் எழுந்தாளராக நடித்திருந்தார். 50 வயதை கடந்து விட்ட நந்திதாஸ் தாஸ் தற்போது, வெள்ளை முடி, கண்ணாடியுடன் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.