உன்னி முகுந்தன்
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன். மலையாள சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல முகங்களுடன் வலம் வருகிறார் உன்னி முகுந்தன். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான சீடன் படத்தின் மூலம் அறிமுகமானார் உன்னி முகுந்தன்.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Dhanush: இது என்ன தனுஷுக்கு வந்த சோதனை… கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த ஆட்சியர் உத்தரவு!
மோடியின் ரசிகர்
உன்னி முகுந்தன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான மல்லு சிங் படம் அவருக்கு பெரும் பிரேக்கை கொடுத்தது. தொடர்ந்து மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார் உன்னி முகுந்தன். உன்னி முகுந்தன் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஆவார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி கேரளா சென்றார்.
பாஜக ஆட்சி
அங்கு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். கொச்சியில் இளைஞடர அமைப்பினர் பங்கேற்ற மாநாட்டிலும் பங்கேற்றார் பிரதமர் மோடி. அப்போது கேரள மாநிலத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும் என்றார். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
Trisha: மாடர்ன் லுக்கில் மிரட்டும் குந்தவை… த்ரிஷாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
மோடியுடன் சந்திப்பு
மேலும் திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியம் சென்ற பிரதமர் மோடி கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார். இந்நிலையில் கேரளா வந்த பிரதர் மோடியை நடிகர் உன்னி முகுந்தன் நேரில் சந்தித்து பேசினார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள உன்னி முகுந்தன், உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
14 வயதில் கண்ட கனவு
அதில் இந்தக் கணக்கிலிருந்து மிகவும் உற்சாகமான பதிவு இது! நன்றி சார், 14 வயதில் உங்களைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு இப்போது உங்களைச் சந்தித்துள்ளேன். அதில் இருந்து இன்னமும் மீளவில்லை. மேடையில் உங்கள், “கெம் சோ பைலா” உண்மையில் என்னை உலுக்கியது! குஜராத்தியில் உன்னைச் சந்தித்து பேச வேண்டும் என்பது ஒரு பெரிய கனவு!
Meena: 46 வயசா… இது ஒன்னே போதும்.. இன்னொரு ரவுண்ட் வரலாம்.. மீனாவோட லேட்டஸ்ட் வீடியோ!
சிறந்த 45 நிமிடங்கள்
உங்கள் நேரத்தின் 45 நிமிடங்கள், என் வாழ்க்கையின் சிறந்த 45 நிமிடங்கள்! நீங்கள் சொன்ன ஒரு வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது… ஒவ்வொரு அறிவுரையும் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்! ஜெய் ஸ்ரீகிருஷ்ணன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். உன்னி முகுந்தனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
விருதுகள்
உன்னி முகுந்தன் நடிப்பில் கடைசியாக மலிகாப்புரம் என்ற படம் வெளியானது. உன்னி முகுந்தன் ஏராளாமான விருதுகளையும் குவித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் உன்னி முகுந்தன்.
Vijayakanth: விஜயகாந்த் சாப்பிடுவாரா? தூங்குவாரான்னு கூட தெரியாது… பிரபல நடிகர் உருக்கம்!