Whatsapp Feature: இனி ஒரு கணக்கை நான்கு கருவிகளில் பயன்படுத்தலாம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
உலகளவில் மிகவும் பிரபலமான Whatsapp செயலியில் இனி ஓரே நேரத்தில் நான்கு பேர் பயன்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நமது ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் PC ஆகியவற்றில் நாம் பயன்படுத்துவது போல நான்கு வேறு ஸ்மார்ட்போன்களில் இனி Whatsapp பயன்படுத்தலாம்.

இன்னும் சில வாரங்களில் இந்த வசதிகள் அனைவருக்கும் அப்டேட் மூலம் கிடைக்கும். இவற்றில் எந்த ஒரு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறையாமல் இனி பல்வேறு சாதனைகளில் Whatsapp பயன்படுத்தலாம்.

இந்த நான்கு சாதானங்களையும் நமது முக்கிய Whatsapp Account உடன் இணைத்துவிட்டால் போதும். நமது முக்கிய ஸ்மார்ட்போன் அல்லது சாதனத்தின் மூலம் மற்ற சாதனைகளுக்கு அனுமதி அளிக்கலாம். இதற்காக Whatsapp Web பயன்படுத்தும்போது கேட்கும் QR Code அனுமதி தரவேண்டும். இதற்கு OTP மூலம் இன்னொரு வழியையும் Whatsapp உருவாக்கியுள்ளது.

Online rummy Rules தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய விதிகள் அறிவிப்பு!

நமது ஸ்மார்ட்போன்களில் உள்ள பேட்டரி தீர்ந்து போனால் மற்றொரு ஸ்மார்ட்போன் மூலமாக நாம் Whatsapp பயன்படுத்தலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார். இதற்காக நமது மெசேஜ் மற்ற கருவிகளில் Sync ஆகி மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் பாதுகாப்பிற்கு நாம் பயன்படுத்தும் முக்கிய போனில் உள்ள ஒரு கணக்கை குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தவில்லை என்றால் அந்த கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற சாதனங்கள் அனைத்தும் தானாகவே நீக்கப்பட்டுவிடும்.

IPL 2023 பிறகு ஜியோ சினிமா இலவசம் கிடையாது! ஒரு நாளைக்கு 2 ரூபாய் மட்டுமே கட்டணம்!

தற்போது Whatsapp Web கணக்கை 14 நாட்களுக்கு பயன்படுத்தவில்லை என்றால் அது நீக்கப்பட்டுவிடும். அதன் பிறகு நாம் மீண்டும் இணைக்கவேண்டும். பல்வேறு சாதனங்களை இணைக்கவே இந்த முக்கிய சாதனம் அவசியம் என்றாலும் பயன்பாடு என்று வந்துவிட்டால் அவை தனித்தனியே இருக்கும். நாம் மற்ற கருவிகளில் Whatsapp பயன்படுத்த முக்கிய கருவியில் டேட்டா இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு முறை இணைத்துவிட்டால் போதும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.