தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 2022-23ஆம் கல்வியாண்டிற்கு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை EMIS எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதள வாயிலாக உரிய கால அட்டவணைப்படி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
பொது மாறுதல் கலந்தாய்வு
இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து சில அறிவுரைகள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Teachers Transfer Counselling
பள்ளிக் கல்வித்துறை அறிவுரைகள்
பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை கடைபிடிக்க தேவையில்லை.EMIS இணையத்தில் விண்ணப்பிக்கும் போது தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட Login ID பயன்படுத்த வேண்டும். பின்னர் மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.தங்களின் விவரங்கள் தவறுதலாக இருந்தால் Teacher Profile சென்று சரிசெய்ய வேண்டும்.மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் விவரங்களை தலைமை ஆசிரியர் சரிபார்த்து முதல்கட்டமாக Approval கொடுக்க வேண்டும்.அதன்பிறகு மூன்று நகல்கள் எடுத்து ஆசிரியருக்கு ஒரு நகல், சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஒரு நகல் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்.
Teachers Transfer Counselling
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல்
ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்பட வேண்டும். அதாவது விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகு மாறுதல், பணி நிரவல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உரிய ஆதாரத்துடன் பதிவேற்ற வேண்டும்.மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 01.05.2023 மாலை 5 மணிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்.31.5.2023 அன்றைய நிலவரப்படி அனைத்து வகை ஆசிரியர்களின் நிரப்பத் தகுந்த காலிப் பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் அதற்கென உள்ள உரிய படிவத்தில் 30.04.2023க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.கணவன் – மனைவி முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர் பணிபுரியும் அலுவலகம் அல்லது பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தையும், அதற்கான உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். கணவன் – மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கிலோமீட்டர் மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
Transfer Counselling
கலந்தாய்வு அட்டவணை (நேரம் காலை 9.30 முதல் பிற்பகல் 6 மணி வரை)
மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு – 08.05.2023 திங்கள்அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) – 08.05.2023 திங்கள்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு – 09.05.2023 செவ்வாய் முற்பகல்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு – 09.05.2023 செவ்வாய் பிற்பகல்அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) – 10.05.2023 புதன்பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு – 12.05.2023 வெள்ளிஇடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) – 16.05.2023 செவ்வாய்அரசு/ நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் – 17.05.2023 புதன்