கோவை மாவட்டம் அன்னூருக்கு அருகே இருக்கும் கோவில் பாளையத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் காலகாலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவராக சிவபெருமான் அருள் பாலிக்கிறார். இந்த கோவில் கிட்டதட்ட 2000 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். தனக்கு நேர்ந்த சாபத்திலிருந்து விடுபட எமதர்மன் சிவலிங்கம் செய்து இங்கே வணங்கினார் என்பது ஐதீகம். எமனுக்கு காலன் என்ற பெயருண்டு. காலனுக்கே குருவாக இருப்பதால் இங்கிருக்கும் சிவபெருமானுக்கு காலகாலேஸ்வரர் என்பது திருப்பெயர். இங்கிருக்கும் அம்பாளுக்கு கருணாகரவல்லி என்பது திருப்பெயர். இந்த கோவில் […]
