ஆன்லைன் சூதாட்டத்தில் பணமிழந்த வாலிபர்.!! வங்கியில் கைவரிசையை காட்டிய சம்பவம்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் காசாளராக பணிபுரிந்து வருபவர் முகேஷ். இவர் வங்கியில் இருந்து 43 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு காணாமல் போயுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியான முகேஷை விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் முகேஷிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், முகேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததும் தெரிய வந்தது. மேலும் அதற்காக வங்கியில் இருந்து பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் முகேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.