ஆஹா கரண்ட் செலவும் மிச்சம்.. ஏசி வாங்குற தேவையும் இல்லை.. என்ஜீனியரை மிஞ்சும் ஆப்பிரிக்க கட்டடக் கலை

துனிசியா: தென்னாப்பிரிக்காவில் துனிசியாவில் ஏசி இயந்திரமே இல்லாமல் வெப்பத்திலிருந்து மக்கள் தற்கொத்து கொள்கிறார்கள். என்ஜீனியர்களை விட சாதுர்யமாக வீடுகளை கட்டமைத்துள்ளனர் ஆப்பிரிக்க மக்கள்.

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கட்டடக் கலைகளில் சிறந்து விளங்கும். அதில் கோபுரத்தின் நிழல் விழாத அளவுக்கு கட்டடப்பட்ட சோழர் கால கட்டடக் கலை. வேலூரில் உள்ள சிவன்கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி பட்டு ஒளிரும்.

அது போல் மதுரையில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் கருவறையில் மூலவர் மீது 3 துவாரங்கள் வழியாக சூரிய ஒளிப்படும். இது மார்ச் மாதமும், செப்டம்பர் மாதமும் நடைபெறும். மற்ற நாட்களில் இந்த அரிய நிகழ்வு நடக்காது.

அந்த காலத்தில் கட்டப்பட்ட அணைகள் 100 ஆண்டுகளை தாண்டியும் வலுவாக இருக்கிறது. இது போல் கட்டடக் கலைக்கு ஏராளமான உதாரணங்களை சொல்லலாம். அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் ஒரு இனத்தை சேர்ந்த மக்கள் கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை எப்படி தற்காத்துக் கொள்கிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

 Do you know How the South African people protect heat in summer without AC?

தென்னாப்பிரிக்காவில் துணிசியாவில் பெர்பெர் இன மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இவர் அரபு மொழியை பேசுவார்கள். இந்த நாட்டில் 40 சதவீதம் சஹாரா பாலைவனமாகும். இதனால் இந்த 40 சதவீத நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் ஒவ்வொரு முறையும் கோடை காலத்தில் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கோடை வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ள நிலத்தடியில் குகை அமைத்து வாழ்கிறார்கள். இந்த குகைகளுக்கு பெயர் மட்மதா ஆகும். நிலத்தடியில் சிறிய துவாரங்களை போட்டு அதனுள்ளே வசித்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு வெப்பம் உள்ளே புகாது. நிலத்தடி என்பதால் குளிர்ச்சியாகவே இருக்கும்.

 Do you know How the South African people protect heat in summer without AC?

இவர்கள் அரேபியாவிலிருந்து துனிசியாவுக்கு வந்துள்ளார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழிலையே செய்து வந்தனர். வந்த புதிதில் துனிசியாவில் இருந்த வெப்பத்தில் அவர்களால் வாழவே முடியாத சூழல் இருந்தது. இதையடுத்துதான் நிலத்தடியில் பள்ளம் தோண்டி அங்கு சிறிய அறைகளை அமைத்து வாழ தொடங்கினர். ஒரு பெரிய வட்ட வடிவில் பள்ளம் தோண்டினர்.

எளிய கைக்கருவிகளுடன் தோண்ட கூடிய மென்மையாக இருக்கும் மணல் கற்களில் முதலில் ஆழமான குழியை தோண்டி வீடுகளை அமைக்கிறார்கள். குழிகளின் விளிம்புகளை சுற்றி தோண்டப்பட்ட நிலத்தடி வீடுகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை கொண்டு வருகிறார்கள். இந்த தனித்துவமான டிரோகுளேடைட் கட்டுமானமானது பகலில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க உதவியது. ஆனால் 1960 களில் பெய்த மழையால் நிலத்தடி வீடுகள் சேதமடைந்துவிட்டன. இருப்பினும் இன்றைய சூழலில் இந்த வீடுகள் அனைத்தும் நவீன வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளன.

 Do you know How the South African people protect heat in summer without AC?

இந்த வீட்டின் ஒவ்வொரு கொல்லை புறமும் ஒரு முற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம் நிலத்தடி வீட்டிற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் காற்று இங்கிருந்துதான் வரும். இந்த குகை வீடுகள் படிக்கட்டுகளை போன்ற அமைப்பை கொண்டவை. இதன் வழிய பயணித்துதான் தரையை அடைய வேண்டும். துனிசிய அதிபர் இந்த மட்மடா பகுதியை நவீனமயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் பெர்பெர் இன மக்கள் பல்வேறு வசதிகளை அனுபவிக்கிறார்கள்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.