வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணியர் உள்ளூர் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி இந்திய ரூபாயையே பயன்படுத்தலாம் என அந்நாட்டின் ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.
இலங்கையில் ‘பிக்கி’ எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு சார்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இலங்கையின் ரிசர்வ் வங்கி கவர்னர் வீரசிங்கே பேசியதாவது:
இலங்கையின் மத்திய வங்கி இந்திய ரூபாயில் வர்த்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையை எடுத்து உள்ளது.
எங்கள் நாட்டிற்கு வரும் இந்திய சுற்றுலா பயணியரும் தங்கள் நாட்டு ரூபாயையே உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். இதுதவிர இரு நாடுகள் இடையே டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் விரும்புகிறோம். இதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள இலங்கை உட்பட 18 நாடுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அனுமதி அளித்து உள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணியரும் நம் நாட்டு ரூபாயையே பயன்படுத்தலாம் என அறிவித்திருப்பது அந்நாட்டு சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் என கருதப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement