கர்நாடகா தேர்தல்: அட்ராசக்க.. பெண்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. இப்படி பண்ணா எப்படி ராகுல்.?

கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றால், பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடா தேர்தல்

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் சூடு பிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே மீதம் உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் இதையே தான் சொல்கின்றன. வேலையில்லா திண்டாட்டம், சிறுபான்மை மற்றும் தலித்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு, ஹிஜாப் விவகாரம், அரசு டெண்டர்களுக்கு 40 சதவிகித கமிஷன், வளர்ச்சி இல்லாதது, விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணிகள் பாஜகவிற்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

அதேபோல் இந்தி திணிப்பு மற்றும் குஜராத்தின் அமுல் பால் நிறுவனத்தை மாநிலத்தில் நுழையவிட்டு மாநிலத்தின் முக்கிய பால் நிறுவனமான நந்தினியை ஓரங்கட்டுவது உள்ளிட்ட பாஜகவின் செயல்பாடுகள் கன்னட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்ப்பு மற்றும் முஸ்லிம்கள், தலித்களின் வாக்கு பாஜகவிற்கு செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சறுக்கும் பாஜக

மேற்கூறிய காரணங்களால் பாஜக பிரச்சார வாகனத்தை மக்கள் ஓட ஓட விரட்டிய வீடியோவும் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலானது. அதேபோல் சீட் கிடைக்காததால், பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் காங்கிரஸிற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மாநிலத்தில் வெற்றியை தீர்மானிக்கும் ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டில் கை வைத்தது பாஜக பெறும் பின்னடைவாக கருதப்படுகிறது.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் கவர்ச்சிகர அறிவிப்புகளும் மக்களை ஈர்த்துள்ளது, நேற்றைய ஐபிஎல் போட்டியின் போது தெரியவந்துள்ளது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்ததை, நேற்று ஐபிஎல் நடந்த கிரிக்கெட் மைதானத்தில் கன்னட இளைஞர்கள் பதாகையுடன் காட்டினர். அதேபோல் வேலையில்லாமல் இருக்கும் டிப்ளோமா படித்தவர்களுக்கு மாதம் ரூ.1500, 200 யுனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் ஆகிற காங்கிரஸ் கட்சியின் அறிவிப்புகளும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு எழுந்துள்ளது.

5வது அறிவிப்பு

இந்தசூழலில் ராகுல் காந்தி தனது 5வது அறிவிப்பாக, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசபயணம் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளது ஒட்டு மொத்த பெண் வாக்களர்களையும் காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளது. இன்று மங்களூருவில் நடந்த பிரச்சாரத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் நாளில் இருந்து கன்னட பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது கர்நாடகாவில் பேசு பொருளாகியுள்ளது.

கர்நாடகாவில் வருகிற மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெரும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.