சண்டக்கோழி – புதிய சீரியலில் கமிட்டான ரியா விஸ்வநாத்

மாடல் அழகி ரியா விஸ்வநாத் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். மக்கள் மத்தியிலும் ரியாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. சில மாதங்களுக்கு முன் சீரியல் குழுவுடன் ஏற்பட்ட மனகசப்பால் ராஜா ராணி 2 தொடரை விட்டு விலகினார். இந்நிலையில், ரியா தற்போது ஜீ தமிழில் புதிதாக உருவாகி வரும் சண்டக்கோழி என்கிற தொடரில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதில், ரியாவுக்கு ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள் நியாஸ் ஹீரோவாக நடிக்கிறார். சண்டைக்கோழி தொடர் வருகிற மே 8 முதல் ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.