சூடானில் நாடோடிகளாக வாழ்ந்தோம்! இனி அங்கு செல்லமாட்டோம்.. வேதனையுடன் கூறிய நாடு திரும்பிய தமிழர்கள்


சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் 8 நாட்களாக நாடோடிகளாக வாழ்ந்ததாக வேதனையுடன் கூறியுள்ளனர்.

இராணுவம் – துணை ராணுவப்படை மோதல்

உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில் நாடோடிகளாக வாழ்ந்தோம்! இனி அங்கு செல்லமாட்டோம்.. வேதனையுடன் கூறிய நாடு திரும்பிய தமிழர்கள் | Tamil People Sad Return From Sudan  Image: MAHMOUD HJAJ/ANADOLU AGENCY VIA GETTY IMAGES

அங்கு சிக்கியுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சொந்த நாடுகளுக்கு அழைத்து வரப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூடானில் இருந்து விமானம் மூலம் சென்னை மற்றும் மதுரைக்கு 9 தமிழர்கள் வந்தடைந்தனர். அவர்களில் 5 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், 4 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சூடானில் நாடோடிகளாக வாழ்ந்தோம்! இனி அங்கு செல்லமாட்டோம்.. வேதனையுடன் கூறிய நாடு திரும்பிய தமிழர்கள் | Tamil People Sad Return From Sudan  Image: Getty Images

வேதனை தெரிவித்த தமிழர்கள்

ஊடகத்திடம் பேசிய பாடசாலை மாணவி ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் இருக்கும் பகுதியை கைப்பற்றுவதற்காக இரு தரப்பினரும் பயங்கரமாக சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என கூறினாலும், துப்பாக்கிகள் மற்றும் குண்டுவெடிப்புகளால், அவர்களுக்கே தெரியாமல் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், எங்கள் பகுதியில் போர் தொடங்கிய நாளிலிருந்து குடிநீர், மின்சாரம் தடைபட்டது. இதனால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். எங்களிடம் உள்ள உணவை சிக்கனமாக பயன்படுத்தி வாழ்ந்தோம்.

சூடானில் நாடோடிகளாக வாழ்ந்தோம்! இனி அங்கு செல்லமாட்டோம்.. வேதனையுடன் கூறிய நாடு திரும்பிய தமிழர்கள் | Tamil People Sad Return From Sudan @ThanthiTV

சூடானில் இருந்து இந்தியா வருவதற்கு இந்திய தூதரக அதிகாரி எங்களுக்கு உதவினார், எங்களை பத்திரமாக சொந்த ஊர் வர உதவிய இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி’ என தெரிவித்தார்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.