தி.நகர்… அதாவது தியாகராயர் நகர் என்ற பெயரை சென்னைவாசிகள் மட்டுமின்றி தமிழக மக்களும் நன்கு அறிந்து வைத்திருப்பர். இந்த பெயர் எப்படி வந்தது என்று நீங்கள் யோசித்தது உண்டா? சர்.பிட்டி தியாகராயரின் நினைவாக வைக்கப்பட்டது தான் அந்தப் பெயர். சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் முன்புறம் தியாகராயரின் சிலை கம்பீரமாக காணப்படுகிறது. இதைப் போலவே இவரது வாழ்வும் அன்னாந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. இவரது வரலாறு 171 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
சென்னை தியாகராய நகர் நார்த் உஷ்மான் சாலையில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது!
தியாகராயர் பிறந்த நாள்
சர் பிட்டி தியாகராயரின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27) கொண்டாடப்படும் நிலையில்,
”திராவிட வீரனே விழி, எழு, நட எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய நீதிக்கட்சியின் தந்தை. மாணவருக்கு மதிய உணவு வழங்கி, இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் நமது திராவிட மாடலுக்கு முன்னோடி. அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடை போடுவோம்”
என்று முதல்வர்
வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். தற்போதுள்ள திராவிட கட்சிகளின் மூத்த முன்னோடி என்றால் அது தென்னிந்திய நல உரிமை சங்கம் தான். இதுவே நீதிக்கட்சியாக பின்னர் மாறியது.
நீதிக்கட்சியின் தந்தை
இதை உருவாக்கிய மூன்று பேரில் ஒருவராக இடம்பெற்றவர் தான் சர் பிட்டி தியாகராயர் (மற்றவர்கள் சி.நடேசனார், டி.எம்.நாயர்). முன்னதாக
பேரியக்கத்தின் மீது பற்று கொண்டு சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டி வந்தார். பின்னர் அக்கட்சியில் நிலவிய ஆதிக்க மனப்பான்மையை கண்டு கொதித்தெழுந்து வெளியேறினார். இந்த சூழலில் 1916ல் தென்னிந்திய நல உரிமை சங்கத்தை தோற்றுவித்தார். இதன் சார்பில் ’நீதி’ என்ற இதழை நடத்தி வந்தனர். இதை தழுவியே ’நீதிக்கட்சி’ என்ற பெயரும் உருவானது.
செல்வந்தர் குடும்பம்
இக்கட்சியின் தலைவராக சர் பிட்டி தியாகராயர் சிறப்பான முறையில் வழிநடத்தி வந்தார். இந்திய விடுதலை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் முழு உரிமை மற்றும் பாதுகாப்பு, பிராமண எதிர்ப்பு ஆகியவற்றை தீவிரமாக முன்னெடுத்து வந்தனர். வணிகத்தில் சிறந்து விளங்கிய செல்வந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தியாகராயர். பி.ஏ பட்டதாரியான இவர், நெசவாலையை தொடங்கி பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கினார். தான் ஈட்டிய பொருளை ஏழை, எளியவர்களுக்கு வாரி கொடுப்பதில் வள்ளலாக திகழ்ந்தார்.
வாரி வழங்கிய வள்ளல்
இதற்கு உதாரணமாக 1876ஆம் ஆண்டு பஞ்சத்தின் போது பசியோடு வந்தவர்களுக்கு உணவு வழங்கிய நிகழ்வை சொல்லலாம். குறிப்பாக தென்னிந்திய வர்த்தக வளர்ச்சி மற்றும் தொழில் பெருக்கத்திற்கு தியாகராயரின் பணிகள் அளப்பறியது. தன்னுடைய சொந்த வருமானத்தில் வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரு பள்ளியை 1897ல் தொடங்கினார். அதற்கு ’வடசென்னை செகண்டரிப் பள்ளி’ எனப் பெயர் சூட்டினார்.
கல்விக்கு ஆற்றிய தொண்டு
இங்கு அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டது. இதுவே பின்னாளில் உயர்நிலைப் பள்ளியாகவும், சென்னை ’சர் தியாகராயா கல்லூரி’யாகவும் உயர்ந்தது. இதுதவிர பல்வேறு பள்ளிகளையும், கல்லூரிகளையும், தொழில்நுட்ப பயிற்சி பள்ளிகளையும் நிறுவினார். 1920ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நகராட்சி பள்ளியில் முதன் முதலில் ’மதிய உணவு திட்டத்தை’ கொண்டு வந்தார்.
வரலாற்றில் இடம்
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்து, பிராமணர் அல்லாத மானவர்களும் மருத்துவம் படிக்க செய்தார். அண்ணாமலை செட்டியார் உடன் இணைந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். இவ்வாறு அளப்பறிய பணிகளை தனது வாழ்நாளில் செய்திருக்கிறார். தனது சொத்தில் பாதியை ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டு சென்ற திராவிட இயக்கத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.