பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் சூலா அடுப்புகளை 34 ஆயிரம் மகளிருக்கு இலவசமாக வழங்கும் பணி புதுச்சேரியில் தொடங்கியுள்ளது.
ஒரு அடி அகலம் ஒன்றரை அடி உயரம் கொண்ட களிமண் மூடியுடன் கூடிய இந்த மண் அடுப்பில் நாப்கினை போட்டு எரித்தால் எவ்வித புகையும் ஏற்படாமல் சாம்பல் ஆகிவிடும்.இதை கீழ்புறமாக எடுத்து வெளியே கொட்டி விடலாம். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அடுப்புகளை தயாரிக்கும் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
சூலா அடுப்புகளை தயாரிக்கும் பணி சுடுமண் சிற்பக் கலைஞர் முனுசாமி தலைமையில் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் அருகே நடைபெற்று வருகிறது.
பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களை அழிப்பது அரசுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 12.3 மில்லியன் பயன்படுத்தப்பட்ட சானிட்டரின் நாப்கின் குப்பை கிடங்குகளில் கொட்டப்படுவதாக சுற்றுச்சூழல் குழு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே சானிட்டரி நாப்கின்களை அழிக்க புதுச்சேரி அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது