பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு



உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பௌதீகவியல், இரசாயனவியல், கணிதம், விவசாயம், உயிரியல், இணைந்த கணிதம், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கை, வணிகக் கற்கைகள், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

அதன்படி, இதுவரை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்களும், 2022 டிசம்பர் 31இற்கு பிறகு ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் இன்று முதல் இணையவழி முறையில் விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

You may like this Video

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.