பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் நேர்ந்த தீ விபத்தால் 7 பேர் உயிரிழந்தனர்.
கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி சென்ற ரயிலில், நள்ளிரவு வேளையில், திடீரென ஒரு பெட்டியில் தீ விபத்து நேர்ந்தது. பின் அடுத்தடுத்த பெட்டிகளுக்குத் தீ வேகமாக பரவியது.
ரயிலுக்குள் சிக்கிக்கொண்ட 6 பயணிகளும், ஜன்னல் வழியாக குதித்த பெண் பயணி ஒருவரும் உயிரிழந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
ஏழை மக்கள் ரயில் பயணங்களின்போது சமைப்பதற்காகத் தடையை மீறி சிறிய கேஸ் அடுப்புகளை எடுத்துசெல்வதால் அடிக்கடி தீ விபத்துகள் நேர்ந்து விடுகின்றன.