சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நாளை (ஏப்.27) உலகம் முழுவதும் வெளியாகிறது.
மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் சிக்கலில் பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியுள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் லைகா நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறது. இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 அட்வான்ஸ் புக்கிங்கில் எதிர்பார்த்ததை விடவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முக்கியமாக முதல் வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் மூலம் மட்டும் இதுவரை 17 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதுண்டு.
அதன்படி, நள்ளிரவு 1 மணி, அல்லது அதிகாலை 3, 4, 5 மணிக்கெல்லாம் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும். ஆனால், பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறப்புக் காட்சி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதுகுறித்து மாவட்ட வாரியாக திரையரங்குகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் சார்பாக அனுப்பப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அனைத்து வட்டாட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட் கட்டணங்கள் அதிகமாக வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், காலை 9 மணிக்கே பொன்னியின் செல்வன் 2 திரையிடப்படவுள்ளது. இதனையடுத்து முதல் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. அதேபோல், சென்னை உட்பட பல நகரங்களில் முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் வேகமாக புக்கிங் ஆகி வருகின்றன. பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்கச் சென்ற அஜித் ரசிகர் விபத்தில் உயிரிழந்தார்.

இதேபோல் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகவே பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நடைமுறை இனிவரும் நாட்களிலும் பின்பற்றப்படும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வசூலிக்கும் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.