முக ஸ்டாலின் செய்த சம்பவம்: திராவிட மாடலை பின்பற்றும் பிற மாநிலங்கள்.. சும்மா அதிருதா.!

மகளிருக்கான இலவச பேருந்து பயணம் மற்றும் மகளிர் உரிமைத் தொகையை கர்நாடகா காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அனைவருக்கும் அனைத்தும் என்பதே திராவிட மாடல் தத்துவம் -கி.வீரமணி

தமிழகத்தில் 2011 முதல் திமுக 10 ஆண்டுகள் எதிர்கட்சியாகவே இருந்தது. 2011ம் ஆண்டில் இருந்து இரண்டு முறை அதிமுக தொடர் வெற்றிகளை கண்டது. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி இந்த காலகட்டத்தில் தான் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான திமுக, முக ஸ்டாலினின் தலைமையின் கீழ் வந்தது. இந்த சூழலில் தான் 2021 சட்டப்பேரவை தேர்தல் வந்தது.

இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருந்தது. தமிழகத்தில் இருபெரும் தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாமல் நடைபெற்ற தேர்தல் இது. அதேபோல் முதல்முறையாக முக ஸ்டாலினும், எடப்பாடி பழனிச்சாமியும் முதல்வர் வேட்பாளராக களமிறங்கினர். இந்த தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக அபார வெற்றி பெற்றது.

தேர்தல் வெற்றிக்கு முக

அளித்த தேர்தல் வாக்குறுதிகள் முக்கிய பங்காற்றின. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், உயர்கல்வி படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. திமுக ஆட்சிக்கு வந்ததும் உயர்கல்வி படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேட்டப்பட்டன.

குடும்பதலைவிகளுக்கு உரிமை தொகை விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டம் பல்வேறு நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை அனைத்து பெண்களும் இலவச பேருந்து பயணத்தால் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக கூலி வேலை செய்யும் பெண்களுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. இதன்மூலம் மாதந்தோறும் சுமார் 1000 ரூபாய் வரை சேமிக்க முடிவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த திட்டங்களை எல்லாம் உள்ளடக்கி இந்த அரசு திராவிட மாடல் அரசு என முக ஸ்டாலின் மார் தட்டினார்.

இந்த திராவிட மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியிருப்பது தான், மேற்கூறிய திட்டங்களின் முக்கியத்துவம் தெரியவருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் திராவிட மாடல் ஃபார்முலாவை மற்ற மாநிலங்களும் பின்பற்றுவது தற்போதைய ஹாட் டாபிக். மகளிர்க்கான இலவச பேருந்து பயணம் ஏற்கனவே புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து பெண்களும் அரசுப் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் கர்நாடகாவிலும் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மங்களுருவில் பேசிய ராகுல் காந்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த நாளில் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். அதேபோல் மகளிர் உரிமைத் தொகையும் ஏற்கனவே அங்கு காங்கிரஸால் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.