மேற்குவங்க மாநிலம் மால்டாவில் துப்பாக்கி ஏந்திபடி பள்ளிக்குள் புகுந்த நபரால் பதற்றமான சூழல் உருவானது.
கடுமையான முயற்சிக்குப் பின்னர் இளைஞர்கள் உதவியுடன் அவனை சுற்றி வளைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
துப்பாக்கியை வைத்து இருந்த போதும் யாரையும் அந்த நபர் மிரட்டவில்லை என்றும், பேப்பர் படித்துக் கொண்டு இருந்ததாகவும் சில மாணவர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சில பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. குடும்ப பிரச்சனையில் இவ்வாறு செய்ததாக கூறப்படும் நிலையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.