சென்னை: சிக்கனத்தை வலியுறுத்தி வரும் பொருளதாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசனை வைத்து பல்வேறு மீம்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த மீம்ஸ் கொஞ்சம் வித்தியாசமானது, ஒருவர் வாழை மரத்தின் இலையை வெட்டாமல் அதில் அப்படியே சாப்பாடு போட்டு சாப்பிடுவார். அதை பின்னர் கழுவி விடுவார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஆனந்த் சீனிவாசனை குறிப்பிட்டு அவரை விமர்சித்து வருகிறார்கள்.
இன்றைய 90ஸ் கிட்ஸ்கள் பலர் ஆன்ந்த் சீனிவாசன் கூறிய அட்வைஸ்க்கு அப்புறம் பணம் சேமிப்பில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். 40 ஆயிரம் சம்பளம் வாங்குனா கூட சாதாரண சம்பளம் தான் என்று இன்றைய இளைஞர்களை புள்ளி விவரத்தோடு பேசி உணர வைத்தவர்.
புதுசா பைக் வாங்க ஆசைப்படுற.. கார் வாங்க ஆசைப்படுற சாமானிய மக்கள் முதலில் கேட்க வேண்டியது ஆனந்த் சீனிவாசனின் பேச்சைத்தான். கேட்டுவிட்டு வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். இதேபோல் பர்சனல் லோன் வாங்க விரும்புவர்கள், வங்கியில் கடன் வாங்கி வீடு கட்ட நினைப்பவர்களும் பார்க்க வேண்டியது ஆன்ந்த் சீனிவாசனின் வீடியோவைத்தான்.
ஏன் கிரிடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், நகைகை அடகு வைத்து கடன் பெற விரும்புபவர்களும் ஒருமுறை ஆனந்த் சீனிவாசனின் அட்வைஸை கேட்டுவிட்டு செய்தால் கண்டிப்பாக மனமாற்றம் அடைவார்கள். பணத்தை எப்படி சேமிக்க முடியும். உங்களுக்கு என்ன செலவு ஆகும் என்பதை புள்ளி விவரத்தோடு கூறி, உங்கள் அதிர வைத்துவிடுவார்.

புதுசா கல்யானம் ஆனவங்க, கல்யாணம் ஆகப்போறவங்க ஆனந்த் சீனிவாசனின் பேச்சை கேட்டால், கண்டிப்பாக தங்கள் சேமிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டிப்பாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்கள் நிலைப்பாட்டையே மாற்றிக்கொள்வார்கள். இவ்வளவு நேரம் ஆனந்த் சீனிவாசன் அவர்களை பற்றி சொல்ல காரணம்.

அண்மையில் ஒரு மீம்ஸ் வந்திருக்கும். நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்று தூக்கத்தில் வந்து ஆனந்த் சீனிவாசன் இளைஞர்களை எழுப்பியதாக அந்த மீம்ஸ் இருக்கும். அது வேறவெலவில் வைரல் ஆனது. சிக்கனம் எவ்வளவு முக்கியம், இளைஞர்களின் உதாரித்தனம் ஆகியவற்றை ஆனந்த் சீனிவாசன் தோல் உறித்திருப்பார். அதனால் தான் அந்த மீம்ஸ்கள் பரவியது.
சரி விஷயத்திற்கு வருவோம். இப்போதெல்லாம் யாராவது சிக்கனத்தை கடைபிடித்தால் ஆனந்த் சீனிவாசன் அவர்களை தொடர்பு படுத்தி மீம்ஸ் போடுவது வாடிக்கையாகிவிட்டது. அப்படித்தான் ஒரு மீம்ஸ் வீடியோ வந்துள்ளது. அதில் ஒருவர் வாழை மரத்தின் இலையை வெட்டாமல் அதில் அப்படியே சாப்பாடு போட்டு சாப்பிடுவார். அதை பின்னர் கழுவி விடுவார். இதை பார்த்த நெட்டிசன்கள் , உங்களை பார்த்தால் ஆன்ந்த் சீனிவாசன் கொண்டாடுவார் என்று கூறியுள்ளனர். பலரும் இந்த மீம்ஸ் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.