லண்டனை சார்ந்த உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதியவருக்கு எதிராக மேல் விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது சென்னை போக்சோ நீதிமன்றம்.
சென்னையைச் சார்ந்த தம்பதியினர் லண்டனில் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு விடுமுறையை கழிப்பதற்காக தங்கள் மகளுடன் என்னை வந்திருக்கின்றனர். பின்னர் லண்டன் திரும்பி அவர்கள் பள்ளிக்குச் சென்ற தங்களது மகளின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதை உணர்ந்தனர்.
இதனால் குழந்தைக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. கவுன்சிலிங் என்பது சென்னையில் தாத்தா முறை கொண்ட உறவுக்கார முதியவர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை வந்த சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதியவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. தனது வழக்கில் மேல் மேல்விசாரணை நடத்துமாறு முதியவர் கொடுத்த மனுவை தொடர்ந்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி வழக்குகளில் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களை லண்டனிலிருந்து பெற வேண்டியிருப்பதால் இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.