Citroen C3 Aircross – சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி அறிமுகம்

சிட்ரோன் நிறுவனம் வெளியிட்டுள்ள 5 மற்றும் 7 இருக்கை பெற்ற C3 ஏர்கிராஸ் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் C3 எஸ்யூவி காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் C5 ஏர்கிராஸ் எஸ்யூவி, C3 எஸ்யூவி ஆகிய மாடல்களை தொடர்ந்து மூன்றாவது மாடலாக C3 ஏர்கிராஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கான உதிரிபாகங்கள் 90 % உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதனால் விலை மிக சவாலாக அமைந்திருக்கும்.

Citroen C3 Aircross

சிட்ரோனின் புதிய எஸ்யூவி ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை, தனது பாரம்பரிய கிரில் அமைப்பு கொடுக்கப்பட்டு, இரண்டு பிரிவுகளை கொண்ட க்ரோம் ஸ்லாட் மத்தியில் லோகோ கொடுக்கபட்டு இரு பக்க முனைகளிலும் எல்இடி ரன்னிங் விளக்கு மற்றும் அதற்கு கீழே எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது.  முன் பம்பர் சற்று உயரமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்து மூடுபனி விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பம்பரின் கீழ் பகுதியில் அலுமினியம் ஃபாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

காம்பாக்ட் C3 எஸ்யூவி மாடலுடன் ஒப்பிடும்போது சற்று நீளம் அதிகமாகவும், அதிக உயரத்தையும் பெற்று மூன்றாவது வரிசை  இருக்கைக்கு ஏற்றவாறு எளிதாக்குகிறது. இந்த காரில் புதிய 17 இன்ச் அலாய் வீல் பெறுகிறது.

சி3 காரை போலவே இந்த காரின் எல்இடி டெயில் லைட் மற்றும் பம்பர் போன்றவற்றை கொண்டதாக அமைந்திருக்கின்றது. 4,300mm நீளம் மற்றும் 2,671mm வீல்பேஸ் கொண்டுள்ள சி3 ஏர்கிராஸ் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200mm ஆகும்.

C3 ஏர்கிராஸ் காருக்கு பொருத்தப்பட்டுள்ள என்ஜின் C3 காரில் உள்ள அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆகும். இந்த மாடல் அதிகபட்சமாக 110PS மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஆறு வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது  ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படலாம்.

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே போன்ற வசதிகளை வழங்குகின்ற 10.2 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே கிளஸ்ட்டர், பகல்/இரவு நேர ஐஆர்விஎம், மேனுவல் ஏசி மற்றும் ரூஃப்-மவுண்டட் ரியர் ஏசி வென்ட்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ரியர்வியூ கேமரா மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் வழங்குகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற கார்களை சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் எதிர்கொள்ள உள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் சிட்ரோன் C3 Aircross விலை ₹ 9 லட்சத்தில் துவங்கலாம். விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளியாகலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.