ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
விஜய் தற்போது லியோ படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகின்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சங்களையே பெற்றது. எனவே தற்போது நடித்து வரும் லியோ படத்தை விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என உழைத்து வருகின்றார் விஜய்.
காஷ்மீரில் கடுமையான சூழலுக்கு மத்தியில் லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றார் தளபதி. மேலும் மே மாதத்திற்குள் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடியும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தைப்பற்றிய பேச்சுக்கள் தற்போது துவங்கியுள்ளன.
AK62: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீசாகும் சூப்பர்ஹிட் திரைப்படம்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
வாரிசு படத்தை தொடர்ந்து மேலும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் விதை கைகோர்க்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. வீர சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கிய கோபிசந்த் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் தன் 68 ஆவது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக விஜய் அவ்பேட்டிகளில்வளவாக கலந்துகொள்ளாமல் இருந்து வருகின்றார். பல ஆண்டுகள் கழித்து பீஸ்ட் படத்திற்காக டிவி பேட்டியில் கலந்துகொண்டார் விஜய்.இருந்தாலும் அந்த காலத்தில் விஜய் பல பேட்டிகளில் கலந்துகொண்டு கலகலவென பேசியிருக்கிறார். அந்த வீடியோவெல்லாம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் தற்போது விஜய்யின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அதில் பல விஷயங்களை பற்றி பேசியுள்ள விஜய், தன் வாழ்நாளில் மிகவும் சந்தோஷமான நாள் தன் முதல் படமான நாளைய தீர்ப்பு வெளியான டிசம்பர் 4 1992 தான் என கூறியுள்ளார்.
என்னதான் அப்படத்தின் மூலம் பல கடுமையான விமர்சனங்களை விஜய் சந்தித்தாலும் அந்நாள் தான் அவரின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நாள் என கூறியுள்ளார். மேலும் அரசியல் எனக்கு தெரியாது என்றும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரமாட்டேன் எனவும் கூறியுள்ளார் தளபதி.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜய் தன் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அவரின் மக்கள் இயக்க உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று வருகின்றனர். ஆனால் விஜய் அரசியல் தெரியாது, அரசியலுக்கு வரமாட்டேன் என பழைய பேட்டியில் கூறியுள்ளது ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றது.