Vijay: நான் இதனால் தான் அமைதியாக இருக்கின்றேன்.மனம்விட்டு பேசிய தளபதி..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
விஜய் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும், இனி விஜய்யின் படங்கள் ஓடவே ஓடாது என சில ஆண்டுகளுக்கு முன் பலர் கூறிவந்தாலும்அடுத்தடுத்த ஹிமாலய வெற்றிகளின் மூலம் தன் கெத்தை நிரூபித்தார் தளபதி.

துப்பாக்கி படத்தின் மூலம் முதல் முறையாக நூறு கோடி வசூலை எட்டிய விஜய் இதையடுத்து தொடர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார். என்னதான் இவரின் படங்கள் சில கலவையான விமர்சங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைக்கும்.

AK62: அஜித்தை வைத்து படம் எடுக்காதீர்கள் என்றார்கள்..உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!

அந்த வகையில் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூலில் அடித்து நொறுக்கியது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றார். இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என பேசப்பட்டு வருகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதைத்தொடர்ந்து விஜய் கடந்த சில ஆண்டுகளாக அவ்வளவாக பேட்டிகள் கொடுப்பதில்லை. கடைசியாக பீஸ்ட் படத்திற்காக டிவியில் பேட்டி கொடுத்தார் தளபதி. அதன் பின் எந்த ஒரு பேட்டியிலும் விஜய் கலந்துகொள்ளவில்லை. எனவே விஜய்யின் பல பேட்டிகளை எடுத்து ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஒரு பேட்டி இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அதாவது விஜய் தான் ஏன் எப்போதும் அமைதியாகவே இருக்கின்றேன் என அப்பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் எப்போதும் எதையாவது நினைத்து யோசித்துக்கொண்டே இருப்பேன். தனியாக அமர்ந்து மணிக்கணக்கில் யோசித்துக்கொண்டே இருப்பேன்.

தனிமை எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக மாறிவிட்டது. அப்போது தான் நிறைய விஷயங்களை பற்றி யோசிக்க முடியும் என கூறியுள்ளார் விஜய்.இந்நிலையில் விஜய் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சைலண்டாகவே இருப்பார் என பலர் கூறியுள்ள நிலையில் அவரின் நெருங்கிய நண்பர்களிடமும், உறவினர்களிடமும் விஜய் கலகலப்பாகவே இருப்பாராம்.

தனக்கு நெருக்கமானவர்களிடம் எப்போதும் கலகலவென பேசி வேறொரு விஜய்யாக மாறிவிடுவாராம். இந்நிலையில் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. இந்த பேட்டி போக்கிரி படம் வெளியானபோது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.