புதுடில்லி, தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அட்டிக் அஹமது கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ‘மருத்துவப் பரிசோதனைக்காக, அவரை நடக்க வைத்து அழைத்து வந்தது ஏன்…’ என்பது உட்பட பல்வேறு கேள்விகளை, உ.பி., மாநில அரசிடம், உச்ச நீதிமன்றம் எழுப்பிஉள்ளது.
உத்தர பிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்த அட்டிக் அஹமது, சமாஜ்வாதி கட்சி சார்பில் எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.
இவர் மீது, ௧௦௦க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அட்டிக் அஹமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் பிரயாக்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டுஇருந்தனர்.
இவர்கள், கடந்த 15ம் தேதி இரவில் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது, மூன்று பேர் அட்டிக் மற்றும் அவரது சகோதரரை சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக விஷால் திவாரி என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, உ.பி., அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்ஹியிடம் நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
அட்டிக் அஹமதுவையும், அவரது சகோதரரையும் மருத்துவமனை வாசல் அருகே வாகனத்தை நிறுத்தி அழைத்துச் செல்லாமல், நடக்க வைத்து அழைத்து வந்தது ஏன்? இது குறித்து தற்போது நடந்து வரும் விசாரணையின் நிலை குறித்து விரிவான அறிக்கையை, உ.பி., அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement