இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு | Capture of oil tanker carrying Indian crews

துபாய்அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், 24 இந்திய பணியாளர்களுடன் ஹூஸ்டன் நோக்கி சென்ற போது, ஓமன் அருகே ஈரான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் உள்ள மார்ஷல் தீவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், மேற்காசிய நாடான குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. ‘அட்வான்டேஜ் ஸ்வீட்’ என்ற இந்தக் கப்பலில் இந்திய பணியாளர்கள் 24 பேர் இருந்தனர்.

இது, மேற்காசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு மேற்காசிய நாடான ஈரானின் கடற்படையினர், தங்கள் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கூறி இந்தக் கப்பலை சிறைப்பிடித்தனர்.

கப்பல் சிறை பிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, ‘ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற சம்பவங்களை ஈரான் நிறுத்த வேண்டும். சிறைபிடித்த கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என கூறியுள்ளது.

ஈரானின் அணு ஆயுத திட்டம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் அந்நாட்டிற்கும் இடையே மோதல் நிலவும் நிலையில், அமெரிக்க கப்பல் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.