சென்னை : இசைஞானி இளையராஜா மற்றும் ஜேம்ஸ் வசந்த் இருவருக்கும் இடையே பனிப்போரே நடந்து வருகிறது.
இளையராஜா கிறிஸ்துவ மதத்தை இழிவுப்படுத்தி விட்டதாக ஜேம்ஸ் வசந்த் அவரை மட்டமான மனிதன் என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மேலும், ஜேம்ஸ் வசந்த் , ரமண மஹரிஷி பற்றி பேசி இந்து மதத்தை விமர்சித்திருந்தார். இதற்கெல்லாம் காரணம் இவர்களுக்குள்ளே இருக்கும் தீராத வன்மம் தான்.
நாகரீகமான பேச்சு : இதைப் பற்றி தெரிந்த சினிமா விமர்சகரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில், இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை குறித்து விளக்கி உள்ளார். அதில், ஜேம்ஸ் வசந்தின் சமீபத்தைய பேட்டியை பார்த்தேன், அதில் ஆரம்பத்தில் இசையராஜாவின் இசைதான் தாலாட்டு பாட்டு என்று பேசிக்கொண்டு வரும் ஜேம்ஸ் வசந்த், பின் அவன், இவன் என்று ஒருமையில் பேசுகிறார். இது நாகரீகமான வார்த்தையாகும்.
உலகம் போற்றக்கூடிய இசைஞானி : இளையராஜா மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கலாம், ஆனால், 1500 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி, இசையரசன் அவர் தான். 80 கால கட்டத்தில் இந்தி இசையும், இந்தி பாடலும் தமிழ் ரசிகர்களை ஆக்கிரமித்து இருந்த நேரத்தில், ஒரு நாட்டுப்புற பாடலை திரையில் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் இளையராஜா. இன்றும் உலக அளவில் போற்றக்கூடிய ஒருவராக இருக்கிறார் இளையராஜா.
டேனியல் ராசைய்யா : ஜேம்ஸ் வசந்த் இளையராஜா மீது இவ்வளவு வன்மத்துடன் இருப்பதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று மதரீதியான பிரச்சனை இருக்கிறது. ஜேம்ஸ் வசந்த் அளித்த பேட்டியில் டேனியல் ராசைய்யா என்று இளையராஜவை அடிக்கடி குத்தி காண்பித்து பேசியிருப்பார். அவர் டேனியல் ராசைய்யாவாக இருந்து இப்போது இளைய ராஜாவாக மாறியிருக்கிறார். நீங்கள் ஜேம்ஸ் வசந்த்தாகவே இருங்கள் அதை குத்திகாட்டவேண்டிய அவசியம் இல்லை.
மோதலுக்கு காரணம் : அதேபோல, சுப்புரமணியபுரம் திரைப்படத்தில் தான் ஜேம்ஸ் வசந்த் முதன் முறையாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். அந்த படத்தின் பாடலில் இளையராஜாவின் அப்பட்டமான சாயல் இருக்கும். கல்லுக்குள் ஈரம் படத்தில் வரும் சிறுபொன்மணி பாடலின் சில டியூனை சுப்புரமணியபுரம் பட பாடலில் ஜேம்ஸ் வசந்த் பயன்படுத்தி இருப்பார். இது தெரிந்த இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். இது தான் இவர்கள் இருவரின் மோதலுக்கு காரணமாக இருந்தது.
நாகரீகமில்லாத பேச்சு : இந்த மோதல் உச்சமடைவதற்கு முக்கிய காரணம் கூகுள் நிறுவனம் இளையராஜாவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தியது. அந்த விழாவில் பேசிய இளையராஜா, இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிர்தெழுத்தார் என்று சொல்லப்படுவது பொய், ரமண மஹரிஷி ஒருவர் தான் உண்மையில் உயிர்தெழுந்தார் என்று பேசியிருந்தார். இந்த விழா நடந்து பல வருடமான நிலையில் இப்போது இந்த பிரச்சனையை தோண்டி எடுத்த ஜேம்ஸ் வசந்த், ரமண மஹரிஷி குறித்து மோசமாக பேசினார்.
மதச்சண்டையாகி இருக்கும் : இளையராஜா மற்றும் ஜேம்ஸ் வசந்த் இருவரின் சண்டை, மதச்சண்டையாக மாறியிருக்கும், நல்ல வேளையாக இதையாரும் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார்கள். ஆனால், ஜேம்ஸ் வசந்தின் பேட்டியை யார் பார்த்தாலும் என்னடா இப்படி மோசமாக பேசுகிறார் என்று தான் தோன்றும் அந்த அளவுக்கு நாகரீகமில்லாமல் ஜேம்ஸ் வசந்த் பேசி உள்ளார் என்று செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார்.