புதுடில்லி ‘திருமண அந்தஸ்து இல்லாத நிலையில், ஒரே பாலின ஜோடிகளுக்கு எந்த வகையில் சமூக நலப் பலன்கள் உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்வது என்பது குறித்து ஆராய வேண்டும்’ என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கூறிஉள்ளது.
சமூகப் பலன்கள்
ஒரே பாலினத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நேற்றும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தில், பார்லிமென்ட் தான் சட்டம் இயற்ற முடியும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இதை நாங்கள் ஏற்பதாக எடுத்துக் கொள்வோம்.
அந்த நிலையில், ஒரே பாலினத் திருமணம் செய்த ஜோடிகளுக்கு, எந்த வகையில் சமூகப் பலன்கள் கிடைக்கும்.
வங்கிக் கணக்கு துவக்குவது, காப்பீடு பெறுவது என, இவர்கள் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். அந்தப் பிரச்னைகளை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.
விசாரணை
அதனால், இந்த ஜோடிகளுக்கு எந்த வகையில், இந்த சமூகப் பலன்களை அளிக்க முடியும் என்பது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும். அது தொடர்பாக தன் பதிலை, மே ௩ம் தேதி விசாரணைக்குள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement