கோபிச்செட்டிபாளையம் அருகே, நள்ளிரவில் கிணற்றுக்குள் தவறி விழுந்து கயிற்றை பிடித்தப்படி தத்தளித்துவந்த பெண்ணை மறுநாள் காலை தீயணைப்புத்துறையினர் வந்து வெளியே மீட்டனர்.
தாசம்பாளையத்தைச் சேர்ந்த மல்லிகா, நள்ளிரவு 2 மணியளவில், வீட்டிற்குள் வெட்கையாக இருந்ததால் காற்று வாங்க அருகே இருந்த பொதுகிணற்றின் சுற்றுச்சுவர் மீது அமர்ந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராவிதமாக கால் இடறி கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. 80 அடி ஆழ கிணற்றில் 20 அடி வரை தண்ணீர் இருந்த நிலையில், மோட்டார் கயிற்றை பற்றியபடி விடிய விடிய தத்தளித்துவந்துள்ளார்.
அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றிலிருந்து அழுகுரல் வருவதை கேட்டு எட்டி பார்த்தபோது மல்லிகா உள்ளே இருப்பது தெரியவந்தது.
வீட்டில் உறங்கிகொண்டிருந்த கணவனிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மல்லிகாவை மீட்டனர்.