தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக கொடி கட்டி பறந்த தொகுப்பாளினி பெப்சி உமா.சன் டிவியில் இவர் வாராவாரம் தொகுத்து வழங்கிய நீங்கள் கேட்டப்பட பாடல் நிகழ்ச்சி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அப்போதே இவரின் குரலுக்கு ரசிகர்கள் ஏராளம்.
அவர் உச்சத்தில் இருந்தபோது பல ஸ்டார் நடிகர்களோடு நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், கமல் ‘அன்பே சிவம்’ படத்தில் நடிக்க அழைத்ததாகவும் ஆனால் அவர் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாததால் அதை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்த பெப்சி உமா சமீபத்தில் ஒரு விருது விழாவில் பங்கேற்றார். அப்போது விரைவில் சின்னத் திரை நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம் என்று கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.