வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியா வந்துள்ள சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷங்புவுடன் கைகுலுக்குவதை ராஜ்நாத் சிங் தவிர்த்துவிட்டார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு, டில்லியில் நடந்தது. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தஜகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், சீன ஆகிய நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் டில்லி வந்துள்ளனர். மாநாட்டிற்கு இடையே, நான்கு நாட்டு அமைச்சர்களும் ராஜ்நாத் சிங்குடன் தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். சந்திப்பு துவங்குவதற்கு முன்னர், தஜகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான் நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களுடன் ராஜ்நாத் சிங் கைகுலுக்கி வரவேற்பு அளித்தார். ஆனால், சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷங்புவை சந்தித்த போது, கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டு வணக்கம் தெரிவித்தார். பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிறகு லீ ஷங்பு கூறுகையில்,‛ நெருங்கிய அண்டை நாடுகள் மற்றும் முக்கியமான வளரும் நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியாவும், சீனாவும் வேறுபாடுகளை தாண்டி, பொதுவான நலன்களை பகிர்ந்து கொண்டுள்ளன. இரு தரப்பு உறவுகள், மற்ற நாடுகளின் வளர்ச்சி ஆகியவற்றை உலகத்தின் நலன் மற்றும் பிராந்திய அமைதி , ஸ்திரத்தன்மைக்காக பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக போராட்டம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் போராட வேண்டும். இந்த அமைப்பு வலுப்பெற வேண்டும் என்றால், ஒருங்கிணைந்து போராடுவது அவசியம். பயங்கரவாதிகள் புதிய வழிகளை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இந்த அமைப்பை வலுப்படுத்தவும், அமைப்பின் தீர்மானங்களை அமல்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement