சைபர் தாக்குதலை சமாளிக்க ராணுவத்தில் புதிய பிரிவு| New unit in army to deal with cyber attack

புதுடில்லி அண்டை நாடுகள் நடத்தும், ‘சைபர்’ தாக்குதல்களை சமாளிப்பதற்காக, நிபுணர்கள் அடங்கிய புதிய படைப் பிரிவை உருவாக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நாம் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறோம். பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது.

அதுபோல, சீனாவும் தன் ராணுவத்தை பயன்படுத்தி மிரட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சைபர் எனப்படும் இணையவழி வாயிலாகவும் இந்நாடுகள் போர்களில் ஈடுபட்டு வருகின்றன. நம் நாட்டின் இணைய தளங்களை முடக்குவதுடன், ராணுவத்தின் இணையதளங்கள் மீதும் இந்த நாடுகள் தாக்குதல்கள் நடத்துகின்றன.

இந்த பிரச்னையை சமாளிக்க, நிபுணர்கள் அடங்கிய சைபர் போர் தடுப்பு படைப் பிரிவை உருவாக்க நம் ராணுவம் திட்டமிட்டுள்ளது.

ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தலைமையில் சமீபத்தில் ராணுவப் படைப் பிரிவுகளின் கூட்டம் நடந்தது. அதில், இது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.