திடீரென்று மாயமான பிரித்தானிய பிரபலம்… 6 மாதங்களுக்கு பிறகு அதிகாரிகள் வெளியிட்ட தகவல்


முன்னாள் ரக்பி விளையாட்டு வீரரும் X Factor நட்சத்திரமுமான லெவி டேவிஸ் ஸ்பெயின் நாட்டில் திடீரென்று மாயமான நிலையில், ஆறு மாதங்களுக்கு பின்னர் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டிருந்தனர்.

துறைமுகத்தில் மூழ்கி

அதில் 25 வயதான லெவி டேவிஸ் பார்சிலோனாவில் உள்ள மதுபான விடுதியில் இருந்து வெளியேறிய பின்னர், நகரின் துறைமுகத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திடீரென்று மாயமான பிரித்தானிய பிரபலம்... 6 மாதங்களுக்கு பிறகு அதிகாரிகள் வெளியிட்ட தகவல் | Levi Davis Cops Reveal New Details Credit: Rex Features

ஆனால், கடலோரப்படை அதிகாரிகளால் இந்த விவகாரம் தொடர்பிலான அறிக்கைக்காக விசாரணை முன்னெடுக்கும் நீதிபதி காத்திருப்பதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, லெவி டேவிஸ் விவகாரத்தில் ஸ்பெயின் பொலிசார் மெத்தனபோக்கையை கடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மேலும், கடலில் தத்தளிக்கும் ஒரு நபரை கப்பல் ஒன்றின் ஊழியர்கள் காண நேர்ந்ததாகவும், ஆனால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த நபர் லெவி டேவிசாக இருக்கலாம் என அவரது தாயாரிடம் கடந்த வாரம் ஸ்பெயின் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திடீரென்று மாயமான பிரித்தானிய பிரபலம்... 6 மாதங்களுக்கு பிறகு அதிகாரிகள் வெளியிட்ட தகவல் | Levi Davis Cops Reveal New Details Credit: Solent

உயிருக்கு ஆபத்து என தாயார் ஜூலி

லெவி டேவிஸ் பார்சிலோனா துறைமுகத்தில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்படுவது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், விசாரணை தொடரும் என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே, தமது மகனுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவர் உயிருக்கு ஆபத்து எனவும் தாயார் ஜூலி டேவிஸ் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த சிக்கலில் இருந்து மீளவே லெவி டேவிஸ் தனியாக ஸ்பெயின் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திடீரென்று மாயமான பிரித்தானிய பிரபலம்... 6 மாதங்களுக்கு பிறகு அதிகாரிகள் வெளியிட்ட தகவல் | Levi Davis Cops Reveal New Details Credit: Darren Fletcher

லெவி டேவிஸ் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காணொளி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த காணொளி தற்போது இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.