தோனி நினைப்பதை மதீஷா பதிரானா செய்வதால், அவரை ரிமோட் கண்ட்ரோல் போல் தோனி பயன்படுத்துகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.
முரளி கார்த்திக் கருத்து
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இரண்டாவது முறையாக சென்னை அணி தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா சிஎஸ்கே அணிக்காக கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுகிறார், தோனியும் அவரை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்.
மேலும் தோனி நினைப்பதை பதிரானா அப்படியே செய்கிறார், இதனால் அவரை தோனி ஒரு “ரிமோட் கண்ட்ரோல்” போல் பயன்படுத்துகிறார். ஆகையால் அவரை அணியில் ஆடும் வீரர்களில் இருந்து நீக்க முடியாது.
மிச்செல் சாண்ட்னர் களமிறக்க வேண்டும்
ஆனால் சென்னை அணியில் திக்சனாவுக்கு பதில் மிச்செல் சாண்ட்னர் சுழற்பந்து வீச்சாளராக களமிறக்கப்பட வேண்டும்.
BCCI
என்னென்றால் சாண்ட்னர் எந்த சூழ்நிலைகளிலும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீச கூடியவர், சிறந்த பீல்டரும் கூட, அதேசமயம் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமையும் கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னை பொறுத்தவரை அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு சாண்டர் அணியில் சேர்க்கப்பட வேண்டும், ஆனால் தோனியோ போட்டிகளை வேறு கோணத்தில் பார்ப்பார் என்று முரளி கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.