பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 7 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் தீ விபத்து
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நள்ளிரவு நேரத்தில் அதுவும் ஓடும் ரயிலில், பெட்டி ஒன்றில் திடீரென பற்றிய தீ, விரைவாக அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் வேகமாக பரவியது.
BREAKING: People jumped out as #Karachi Express train caught fire in Khairpur, Pakistan. According to reports, 2 people died.
— Insider Paper (@TheInsiderPaper) April 27, 2023
இதையடுத்து பயணிகளில் சிலர் ரயில் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர்.
7 உயிரிழப்பு
இந்த திடீர் தீ விபத்தில், ரயில் பெட்டிக்குள் சிக்கிக் கொண்ட 6 பயணிகள் மற்றும் ஜன்னல் வழியாக ரயிலுக்கு வெளியே குதித்த பெண் பயணி ஒருவர் என 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
7 killed, several injured as fire engulfs train near Pakistan’s Khairpur#Pakistan #Khairpur pic.twitter.com/AktCv6AHnZ
— RuptlyNews (@RuptlyNews) April 27, 2023
தீ விபத்திற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படாத நிலையில், இது குறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் மக்கள் ரயில் பயணங்களின் போது தடையை மீறி சமைப்பதற்காக அடிக்கடி சிறிய அளவிலான கேஸ் அடுப்புகளை எடுத்து வருவதால் இதுபோன்ற தீ விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.