வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: முன்னாள் பிரதமருக்காக பெரும் தொகை நன்கொடை அளி்த்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, பி.பி.சி., நிறுவனம். இதன், ‘டிவி சேனல்’ மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிறுவனத்தின் தலைவராக பிரிட்டனின் ரிச்சர்ட் ஷாரப் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
ராஜினாமா ஏன் ?
ரிச்சர்ட் ஷார்ப், கன்சர்வேடிவ் கட்சியின் மிகப் பெரும் நன்கொடையாளராக இருந்து வருகிறார். கடந்த, 2021 ல், அப்போது பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சனுக்கு பெரிய அளவில் (ஒரு பில்லியன் டாலர் ) நன்கொடை அளித்துள்ளார். அதற்கு பரிசாக தான் அரசின் பரிந்துரையின்படி, அவர் பி.பி.சி., தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். எனவே ரிச்சர்ட் ஷார்ப் நியமனம் பி.பி.சி.,யின் நடுநிலைதன்மை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது.
இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement