மதுரையில் பரபரப்பு – திமுக பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் .!
மதுரை மாநாகராட்சியின் 54-வது வார்டு கவுன்சிலராகவும், மாநகராட்சி கணக்குக்குழு தலைவராகவும் உள்ளவர் நூர்ஜஹான். இந்த நிலையில், நேற்று முன் தினம் மத்திய மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் மண்டல தலைவர் பாண்டிச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
அப்போது அந்த கூட்டத்திற்கு வந்த அவரது கணவர் மிசா பாண்டியன், கவுன்சிலர் நூர்ஜஹானை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து நூர்ஜஹான் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நூர்ஜஹான் “மாநகராட்சி கூட்டத்தில் மண்டல தலைவருக்கு பதில் அவரது கணவர் மிசா பாண்டியன் தலைவராக செயல்படுவது குறித்தும், அதிகாரிகள் முன்னிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்தும் கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் ஆளும் கட்சியினரிடையே அதிகார போட்டி நிலவுவதால் பரபரப்பான சூழல் தொடர்கிறது. இது திமுக தொண்டர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.