அவுஸ்திரேலியாவில் தனது மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து, வீட்டோடு எரித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
எரிக்கப்பட்ட வீடு
அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள போர்ட் ஹெட்லேண்ட் என்ற நகரத்தை சேர்ந்த மார்கரெட் டாலே ஹாக்(36), என்ற பெண்மணிக்கு 10வய்து மகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள்.
@9news
கடந்த ஆண்டு தனது குழந்தைகள் மூவரையும் கொலை செய்த குற்றத்திற்காக ஹாக் கைது செய்யப்பட்டார்.
அவர் தனது 10 வயது மகளை மின் கம்பியால் குத்தி கொலை செய்துள்ளார்.
மேலும் தனது இரண்டு குழந்தைகளை கழுத்தை நெறித்து மூச்சு திணற வைத்து கொலை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்த ஹாக் மூவரையும் சேர்த்து வீட்டை எரித்துள்ளார்.
விபத்து போல் சித்தரிக்க முயற்சி
சம்பவத்தை நேரில் பார்த்த நபர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தில் “வீட்டை எரிக்கும் போது அவர் மிக நிதானமாக இருந்தார்” என கூறியுள்ளார்.
ஹாக் தன் கணவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அதனால் தான் நான் இப்படி செய்தேன் என கூறியுள்ளார்.
@wikipidea
முதலில் இதனை தீ விபத்து என நம்ப வைக்க அவர் முயன்றுள்ளார். ஆனால் பொலிஸார் இறந்த உடல்களை பரிசோதனை செய்ததில் கொலை என கண்டறிந்துள்ளனர்.
மேசையில் முட்டி கொண்ட குற்றவாளி
இதனை தொடர்ந்து சிசிடிவி கேமராவில், அவர் வீட்டை எரிக்க முயற்சிகள் செயல்கள் பதிவாகியதை அடுத்து, அவர் தான் குற்றவாளி என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
@9news
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹாக் சோகமாக காணப்பட்டுள்ளார். மேலும் அவர் அழுது கொண்டும், அங்கிருந்த மேசையில் தலையை முட்டிக் கொண்டும் இருந்துள்ளார்.
இந்நிலையில் நீதிபதி மைக்கேல் லுன்ட்பெர்க் தனது தீர்ப்பை வரும் மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக கூறியுள்ளார்.